கே.ஆர்.எஸ். அணையை சுற்றி கல்குவாரிகள் செயல்படுவதை தடுக்க நடவடிக்கை; மந்திரி நாராயணகவுடா பேட்டி


மந்திரி நாராயணகவுடா.
x
மந்திரி நாராயணகவுடா.
தினத்தந்தி 13 July 2021 1:33 AM IST (Updated: 13 July 2021 1:33 AM IST)
t-max-icont-min-icon

கே.ஆர்.எஸ். அணையை சுற்றி கல்குவாரிகள் செயல்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மந்திரி நராயணகவுடா தெரிவித்துள்ளார்.

மண்டியா: கே.ஆர்.எஸ். அணையை சுற்றி கல்குவாரிகள் செயல்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மந்திரி நராயணகவுடா தெரிவித்துள்ளார். 

ஆலோசனை கூட்டம்

மண்டியா மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மாவட்ட பொறுப்பு மந்திரி நாராயணகவுடா தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் கலெக்டர், கனிம வளத்துறை அதிகாரிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர். இந்த ஆலோசனை கூட்டத்துக்கு பிறகு மந்திரி நாராயணகவுடா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- 

கல்குவாரிகளை தடுக்க...

கே.ஆர்.எஸ். அணையை சுற்றி கல்குவாரி நடப்பது தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அணையை சுற்றி கல்குவாரிகள் செயல்படுவதால் அணைக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கே.ஆர்.எஸ். அணை விவகாரம் விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது. இந்த விவாதங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். கே.ஆர்.எஸ். அணையை சுற்றி செயல்படும் கல்குவாரிகளை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். 

அணை அருகே உள்ள பேபி ஹில் பகுதியில் செயல்படும் கல்குவாரிகள் வேறு பகுதிக்கு மாற்றப்படும். அவர்களுக்கு வேறு பகுதிகளில் நிலம் ஒதுக்கி கொடுக்கப்படும். 

கடும் நடவடிக்கை

கனிம வளத்துறை அதிகாரிகள் கல்குவாரி நடக்கும் இடங்களுக்கு சென்று ஆய்வு செய்வதில்லை. எந்தந்த இடங்களில் எவ்வளவு கற்கள் வெட்டி எடுக்கப்படுகிறது என்ற தகவல் அதிகாரிகளிடம் இல்லை. அதிகாரிகளின் ஒத்துழைப்போடு கல்குவாரி செயல்படுவதாக தகவல் வந்துள்ளன. 
கே.ஆர்.எஸ். அணையை சுற்றி கல்குவாரி பணிகள் நடக்கிறது. அங்கு வெடி வைத்தால் சுற்றிலும் வசிக்கும் மக்களுக்கு கல்குவாரி நடப்பது தெரிகிறது.

 ஆனால் அதிகாரிகளுக்கு கல்குவாரி தொழில் நடப்பது தெரியவில்லை. இது ஆச்சரியமாகவும், வேடிக்கையாகவும் உள்ளது. இது அதிகாரிகளின் மெத்தபோக்கை காட்டுகிறது. சட்டவிரோத கல்குவாரிகள் நடப்பதை கண்டுகொள்ளாமல் இருப்பது கண்டனத்துக்குரியது. அலட்சியமாக இருக்கும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்ைக எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார். 

Next Story