பெட்ரோல், டீசல் விலையை கண்டித்து காங்கிரசார் சைக்கிளில் ஊர்வலம்


பெட்ரோல், டீசல் விலையை கண்டித்து காங்கிரசார் சைக்கிளில் ஊர்வலம்
x

பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் விலை உயர்வை கண்டித்து சேலத்தில் காங்கிரஸ் கட்சியினர் 3 இடங்களில் சைக்கிள் ஊர்வலம் நடத்தினர்.

சேலம்
பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் விலை உயர்வை கண்டித்து சேலத்தில் காங்கிரஸ் கட்சியினர் 3 இடங்களில் சைக்கிள் ஊர்வலம் நடத்தினர்.
சைக்கிள் ஊர்வலம்
பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் விலை உயர்வை கண்டித்து சேலம் மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் சூரமங்கலம் தலைமை தபால் நிலையம் முன்பு நேற்று சைக்கிள் ஊர்வலம் நடந்தது. சேலம் மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் பாஸ்கர் தலைமை தாங்கி ஊர்வலத்தை தொடங்கி வைத்தார்.
சூரமங்கலத்தில் தொடங்கிய இந்த ஊர்வலம் 5 ரோடு வழியாக பஸ் நிலையம் அருகே உள்ள காந்தி சிலை அருகே முடிவடைந்தது. இதில் நிர்வாகிகள் கார்த்தி, சிவக்குமார், நாகராஜ், விஜயராஜ், சாந்தமூர்த்தி, கோவிந்தராஜ், நிஷார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
வடக்கு தொகுதி
இதே போன்று சேலம் வடக்கு தொகுதி சார்பில் பொன்னம்மாபேட்டை கேட் அருகே நடந்த சைக்கிள் ஊர்வலத்துக்கு வர்த்தக பிரிவு தலைவர் சுப்பிரமணியம் தலைமை தாங்கினார். தெற்கு தொகுதி சார்பில் அம்மாபேட்டை உழவர் சந்தை அருகே நடைபெற்ற ஊர்வலத்திற்கு பொது செயலாளர் ராஜகணபதி தலைமை தாங்கினார்.
ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டிக்கும் வகையில் வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தி சென்றனர். 3 இடங்களிலும் நடந்த இந்த ஊர்வலத்தில் கட்சி நிர்வாகிகள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

Next Story