கிராமப்புறங்களில் இணைய தொடர்பு சிக்கலுக்கு தீர்வு காண நடவடிக்கை; மந்திரி சுரேஷ்குமார் தகவல்


கிராமப்புறங்களில் இணைய தொடர்பு சிக்கலுக்கு தீர்வு காண நடவடிக்கை; மந்திரி சுரேஷ்குமார் தகவல்
x
தினத்தந்தி 13 July 2021 2:05 AM IST (Updated: 13 July 2021 2:05 AM IST)
t-max-icont-min-icon

கிராமப்புறங்களில் இணைய தொடர்பு சிக்கலுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என்று மந்திரி சுரேஷ்குமார் கூறினார்.

பெங்களூரு: கிராமப்புறங்களில் இணைய தொடர்பு சிக்கலுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என்று மந்திரி சுரேஷ்குமார் கூறினார்.

இணைய தொடர்பு

பள்ளி கல்வித்துறை மந்திரி சுரேஷ்குமார், பெங்களூருவில் நேற்று தலைமை செயலாளர் ரவிக்குமார் உள்பட உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது சுரேஷ்குமார் பேசியதாவது:-

கிராமப்புறங்களில் இணைய தொடர்பில் ஏற்படும் சிக்கல்களுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம். இது தொடர்பாக துணை முதல்-மந்திரி அஸ்வத் நாராயணுடன் ஆலோசனை நடத்தினேன். தற்போது மழை காலம் என்பதால் மலைநாடு மற்றும் கிராமப்புற குழந்தைகளுக்கு சரியான முறையில் இணைய வசதி கிடைக்காது. இந்த பிரச்சினைக்கு விரைவாக தீர்வு காண வேண்டியது அவசியம்.

கிராம நூலகங்கள்

நேரடி வகுப்புகள் தொடங்க முடியாத நிலையில் மாற்று கற்றல் முறையை முக்கியமாக பின்பற்ற வேண்டியுள்ளது. செல்போனில் தடையின்றி இணைய வசதி கிடைக்க செய்வது அவசியம். இதனால் கிராமப்புற குழந்தைகளின் கற்றல், பிரச்சினை இன்றி நடைபெறும். கிராமப்புறங்களில் உள்ள நூலகங்களில் தொலைக்காட்சி வசதி செய்து கொடுக்க வேண்டும்.

கர்நாடகத்தில் 5,766 கிராம நூலகங்கள் உள்ளன. அங்கு தொலைக்காட்சி பெட்டியை வைக்க வேண்டும். அல்லது இணைய வசதியை அங்கு ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். இதன் மூலம் உயர்ரக செல்போன் வசதி இல்லாத குழந்தைகள் அந்த இடத்தை பயன்படுத்தி கற்றலை மேற்கொள்வார்கள். அரசு பள்ளிகளில் கழிவறை வசதிகள் மேம்படுத்தப்படும். எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிந்தவுடன் அந்த விஷயத்தில் கவனம் செலுத்தப்படும்.
இவ்வாறு சுரேஷ்குமார் கூறினார்.

Next Story