தபால் நிலையங்களில் தங்க பத்திரம் விற்பனை


தபால் நிலையங்களில் தங்க பத்திரம் விற்பனை
x
தினத்தந்தி 13 July 2021 3:04 AM IST (Updated: 13 July 2021 3:04 AM IST)
t-max-icont-min-icon

தபால் நிலையங்களில் தங்க பத்திரம் விற்பனை இன்று முதல் நடைபெற உள்ளதாக நெல்லை அஞ்சல் கோட்ட முதுநிலை கண்காணிப்பாளர் சிவாஜி கணேஷ் தெரிவித்து உள்ளார்.

நெல்லை:
நெல்லை அஞ்சல் கோட்ட முதுநிலை கண்காணிப்பாளர் சிவாஜி கணேஷ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
இந்திய அரசு தங்க பத்திரம் திட்டத்தை ரிசர்வ் வங்கி மூலமாக வெளிவிடுகிறது. தற்போது தங்க பத்திர விற்பனை இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் வருகிற 16-ந் தேதி வரை நடைபெற உள்ளது. தனிநபர் ஒரு நிதி ஆண்டுக்கு குறைந்தபட்சம் 1 கிராம் முதல் அதிகப்பட்சம் 4 கிராம் வரை வாங்கலாம்.

மேலும் முதலீட்டு தொகைக்கு 25 சதவீத வட்டியும், 8️ ஆண்டுகள் கழித்து முதிர்வடையும் நாளில் அன்றைய தேதிக்கு தங்கம் விலைக்கு நிகராக பணமும் பெறலாம். தற்போது ஒரு கிராம் ரூ.4,807-க்கு விற்பனை செய்யப்படுகிறது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன், பான் கார்டு, ஆதார் அல்லது வாக்காளர் அடையாள அட்டை இவற்றில் ஏதேனும் ஒன்றின் நகல், தேசியமயமாக்கப்பட்ட வங்கி கணக்கு பாஸ் புத்தகத்தின் முதல் பக்க நகல் ஆகியவற்றை கொண்டு வந்து தங்க பத்திரத்தை அனைத்து அஞ்சல் அலுவலகங்களிலும் விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளலாம். 
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Next Story