மாட்டு வண்டி ஓட்டிச்சென்று காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து பாவூர்சத்திரத்தில் காங்கிரஸ் கட்சியினர் மாட்டு வண்டி ஓட்டிச்சென்று போராட்டம் நடத்தினர்.
பாவூர்சத்திரம்:
பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் விலை உயர்வை கண்டித்து, காங்கிரஸ் கட்சி சார்பில், பாவூர்சத்திரம் பஸ் நிலையம் அருகில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. பழனி நாடார் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். விலை உயர்வை கட்டுப்படுத்த வலியுறுத்தி, அங்கு கியாஸ் சிலிண்டருக்கு மாலை அணிவித்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் பழனி நாடார் எம்.எல்.ஏ. மாட்டு வண்டியில் ஏறி, காங்கிரஸ் நிர்வாகிகளுடன் செல்வ விநாயகபுரம் வரை சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு ஓட்டிச் சென்றார். அவரை பின்தொடர்ந்து ஏராளமான காங்கிரஸ் நிர்வாகிகள் சைக்கிள்களில் பேரணியாக சென்றனர்.
காங்கிரஸ் மாவட்ட பொருளாளர் எஸ்.பி.முரளிராஜா, பொதுச்செயலாளர் எம்.எஸ்.காமராஜ், மாவட்ட செயலாளர் செல்வராஜ், வட்டார தலைவர்கள் தங்கரத்தினம், ஜேசு ஜெகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story