கொரோனாவுக்கு ஒருவர் பலி


கொரோனாவுக்கு ஒருவர் பலி
x
தினத்தந்தி 13 July 2021 4:12 AM IST (Updated: 13 July 2021 4:12 AM IST)
t-max-icont-min-icon

அரியலூரில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஒருவர் பரிதாபமாக இறந்தார்.

அரியலூர்:

அரியலூர் மாவட்டத்தில் நேற்று 26 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவுக்கு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி 58 வயதுடைய ஆண் ஒருவர் உயிரிழந்துள்ளார். ஏற்கனவே சிகிச்சையில் இருந்தவர்களில் 38 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி மருத்துவமனைகளில் இருந்து நேற்று டிஸ்சார்ஜ் ஆகி உள்ளனர்.
தற்போது 405 பேர் கொரோனாவுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் 855 பேருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை முடிவுகள் வரவேண்டியுள்ளது. மாவட்டத்தில் நேற்று தடுப்பூசி 2,755 பேருக்கு போடப்பட்டுள்ளது.

Next Story