மாவட்டங்களில் கடைகள் இரவு 9 மணி வரை செயல்பட்டன


மாவட்டங்களில் கடைகள் இரவு 9 மணி வரை செயல்பட்டன
x
தினத்தந்தி 12 July 2021 10:43 PM GMT (Updated: 12 July 2021 10:43 PM GMT)

நீட்டிக்கப்பட்ட ஊரடங்கில் கூடுதல் தளர்வுகளால் பெரம்பலூர்- அரியலூர் மாவட்டங்களில் கடைகள் இரவு 9 மணி வரை செயல்பட்டன.

பெரம்பலூர்:

ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள்
தமிழகத்தில் கொரோனா 2-வது அலையின் பரவலை கட்டுப்படுத்த கடந்த மே மாதம் 24-ந்தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. கொரோனா பரவல் குறைந்ததால் ஊரடங்கிற்கு தடை விதிக்காமல் பல்வேறு தளர்வுகள் மட்டும் அறிவிக்கப்பட்டு வந்தன.
தமிழகம் முழுவதும் ஒரே மாதிரியான தளர்வுகள் அறிவிக்கப்பட்டு 8-வது முறையாக நீட்டிக்கப்பட்ட ஊரடங்கு நேற்றுடன் முடிவடைய இருந்த நிலையில், தற்போது வருகிற 19-ந்தேதி வரை ஊரடங்கு நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டது. இந்த ஊரடங்கு நீட்டிப்பில் கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்டன.
இரவு 9 மணி வரை...
அதில் ஏற்கனவே இரவு 8 மணி வரை செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ள கடைகள் மற்றும் செயல்பாடுகள் மே 12-ந்தேதி முதல் இரவு 9 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி நேற்று பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் கடைகள் இரவு 9 மணி வரை செயல்பட்டன. நீட்டிக்கப்பட்ட ஊரடங்கில் தமிழகத்தில் இருந்து புதுச்சேரிக்கு அரசு பஸ்கள் இயக்கலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி திருச்சியில் இருந்து பெரம்பலூர் வழியாக புதுச்சேரிக்கு அரசு பஸ்கள் இயக்கப்பட்டன.

Next Story