திருவள்ளூர் மாவட்டத்தில் உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு


திருவள்ளூர் மாவட்டத்தில் உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு
x
தினத்தந்தி 13 July 2021 12:32 PM IST (Updated: 13 July 2021 12:32 PM IST)
t-max-icont-min-icon

உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு திருவள்ளூரில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் நேற்று விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சிக்கு திருவள்ளூர் மாவட்ட வருவாய் அலுவலர் முத்துசாமி தலைமை தாங்கி விழிப்புணர்வு உறுதிமொழியை வாசிக்க அதனை பின்தொடர்ந்து கலெக்டர் அலுவலக ஊழியர்கள், பணியாளர்கள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

பின்னர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு வாகனத்தை மாவட்ட வருவாய் அலுவலர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) வித்யா, குடும்ப நல துணை இயக்குனர் டாக்டர்.இளங்கோவன், சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் டாக்டர்.பிரபாகரன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் முகமது ரசூல் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Next Story