அ.ம.மு.க. பிரமுகர் கார் மீது பெட்ரோல் குண்டு வீச்சு


அ.ம.மு.க. பிரமுகர் கார் மீது பெட்ரோல் குண்டு வீச்சு
x
தினத்தந்தி 13 July 2021 3:07 PM IST (Updated: 13 July 2021 3:07 PM IST)
t-max-icont-min-icon

அ.ம.மு.க. பிரமுகர் கார் மீது பெட்ரோல் குண்டு வீச்சு.

ஆலந்தூர்,

சென்னையை அடுத்த மடிப்பாக்கம் ராஜராஜேஸ்வரி நகரைச் சேர்ந்தவர் ஜெயமுருகன். அங்கு உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார். இவர், தென்சென்னை கிழக்கு மாவட்ட அ.ம.மு.க. எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளராக இருந்து வருகிறார்.

நேற்று முன்தினம் இரவு அடுக்குமாடி குடியிருப்பின் ‘பார்க்கிங்’ பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த இவரது கார் மீது மர்மநபர்கள், பிளாஸ்டிக் பாட்டிலில் நிரப்பிய பெட்ரோல் குண்டை வீசினார்கள். பயங்கர சத்தத்துடன் அது வெடித்து சிதறியதால் அடுக்குமாடி குடியிருப்பே அதிர்ந்தது. உடனடியாக அடுக்குமாடி குடியிருப்புவாசிகள் மற்றும் அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். பெட்ரோல் குண்டு வீசப்பட்டதில் ஜெயமுருகனின் கார் தீப்பிடித்து எரிந்தது. தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர். இதில் காரின் முன்பக்க கண்ணாடி நொறுங்கியது.

இது குறித்து தகவல் அறிந்த மடிப்பாக்கம் போலீசார், சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் தடயவியல் நிபுணர்கள் வந்து அங்கிருந்த தடயங்களை சேகரித்து சென்றனர். மேலும் இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story