தமிழக அரசு அமைத்த நீட் ஆய்வு குழுவுக்கு எதிரான பாஜகவின் மனு தள்ளுபடி- சென்னை ஐகோர்ட்


தமிழக அரசு அமைத்த நீட் ஆய்வு குழுவுக்கு எதிரான பாஜகவின் மனு தள்ளுபடி-  சென்னை ஐகோர்ட்
x
தினத்தந்தி 13 July 2021 4:20 PM IST (Updated: 13 July 2021 4:22 PM IST)
t-max-icont-min-icon

நீட் தேர்வு பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய தமிழக அரசு குழு அமைத்தது செல்லும் என சென்னை ஐகோர்ட் தெரிவித்துள்ளது.

சென்னை,

நீட் தேர்வு  பாதிப்புகளைக் கண்டறிய ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் குழுவை அமைத்து, தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. இந்த அரசாணையை ரத்து செய்யக் கோரி சென்னை உயா்நீதிமன்றத்தில் பாஜக பொதுச் செயலாளா் கரு.நாகராஜன் மனு தாக்கல் செய்தாா்.

இந்த மனு மீதான இன்றைய விசாரணையில், நீட் பாதிப்புகள் குறித்து குழு அமைத்த அரசின் இந்த அறிவிப்பானை உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு எதிரானது அல்ல என்று தலைமை நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார். மேலும்,  குழு நியமனம் என்பது வீண் செலவு எனக் கூறமுடியாது. 

மக்கள் கருத்துக் கேட்பது தொடர்பான கொள்கை முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது. மாணவர் சேர்க்கைக்கான நடைமுறையைத் தடுக்கும் வகையில், மாநில அரசு தனது அதிகார வரம்பை மீறவில்லை எனக்கூறி 
கரு.நாகராஜனின் மனுவை சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்தது. 

Next Story