வீட்டு வரி செலுத்த லஞ்சம் வாங்கிய உதவியாளர் கைது லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி


வீட்டு வரி செலுத்த லஞ்சம் வாங்கிய உதவியாளர் கைது லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி
x
தினத்தந்தி 13 July 2021 4:22 PM IST (Updated: 13 July 2021 4:22 PM IST)
t-max-icont-min-icon

அடையாளம்பட்டு ஊராட்சியில் வீட்டு வரி செலுத்த லஞ்சம் வாங்கிய உதவியாளர் கைது லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி.

பூந்தமல்லி,

சென்னை மதுரவாயலைச் சேர்ந்த ஒருவர், தான் புதிதாக வாங்கிய வீட்டுக்கு வீட்டு வரி நிர்ணயம் செய்ய அடையாளம்பட்டு ஊராட்சி அலுவலகத்தில் விண்ணப்பித்தார். அதை பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்க ஊராட்சி கணினி உதவியாளர் கமல்தாஸ் என்பவர் தனக்கு ரூ.2 ஆயிரம் லஞ்சம் கேட்பதாக சென்னை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை அலுவலகத்தில் புகார் செய்தார்.

உதவியாளரை கையும் களவுமாக பிடிக்க லஞ்ச ஒழிப்பு போலீசார், புகார்தாரரிடம் ரசாயன பொடி தடவிய ரூபாய் நோட்டுகளை கொடுத்து அனுப்பினர். ரசாயனம் தடவிய அந்த ரூபாய் நோட்டுகளை அவரிடம் இருந்து கமல்தாஸ் லஞ்சமாக வாங்கியபோது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் கமல்தாசை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர். கமல்தாஸ் மீது வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.

Next Story