சீர்மிகு சட்டக்கல்லூரியில் படித்த இளம் வக்கீல்களுக்கும் மாத உதவித்தொகை ஐகோர்ட்டு உத்தரவு
சீர்மிகு சட்டக்கல்லூரியில் படித்த இளம் வக்கீல்களுக்கும் மாத உதவித்தொகை ஐகோர்ட்டு உத்தரவு.
சென்னை,
அரசு சட்டக் கல்லூரிகளில் சட்டப்படிப்பு முடித்து வெளிவரும் இளம் வக்கீல்களுக்கு 2 ஆண்டுகளுக்கு மாதம் ரூ.3 ஆயிரம் உதவித்தொகை வழங்கும் திட்டத்தை தமிழக அரசு அறிவித்தது. இந்த திட்டத்தின்கீழ், அரசு சட்டக் கல்லூரிகளில் படித்தவர்களுக்கு மட்டும் உதவித்தொகை வழங்கப்படும், தமிழக அரசின் சீர்மிகு சட்டக் கல்லூரியில் படித்தவர்களுக்கு வழங்கப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டது. இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் வக்கீல் கற்பகம் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர், ‘அரசு சட்டக் கல்லூரி என்பது அரசால், அரசு நிதியுதவியால் நடத்தப்படுவது. அந்த வகையில் சீர்மிகு சட்டக்கல்லூரியும் அரசால் நிர்வகிக்கப்படுவதால், அதுவும் அரசு சட்டக்கல்லூரிதான். அந்தக் கல்லூரியில் படித்து வக்கீல்களாக பதிவு செய்கிறவர்கள், பிற நிபந்தனைகளை பூர்த்திசெய்யும்பட்சத்தில் அவர்களுக்கும் உதவித்தொகையை வழங்கவேண்டும். இந்த வழக்கை முடித்துவைக்கிறோம்' என்று உத்தரவிட்டனர்.

Related Tags :
Next Story