எட்டயபுரத்தில் சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


எட்டயபுரத்தில் சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 13 July 2021 6:00 PM IST (Updated: 13 July 2021 6:00 PM IST)
t-max-icont-min-icon

எட்டயபுரத்தில் சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

எட்டயபுரம்:
பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வை கண்டித்தும், இதற்கு காரணமான மத்திய அரசை கண்டித்தும், அவற்றின் விலையை குறைக்க வலியுறுத்தியும் எட்டயபுரத்தில் சி.ஐ.டி.யு தொழிற்சங்கம் சார்பில் பஸ் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்பாட்டத்திற்கு எட்டயபுரம் நகர சாலை போக்குவரத்து சங்க தலைவர் கண்ணன், ஒருங்கிணைப்பாளர் செல்வக்குமார் ஆகியோர் தலைமை தாங்கினர். பாரதிமில் சி.ஐ.டி.யு தலைவர் ராமர் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் தூத்துக்குடி மாவட்ட ஆட்டோ சங்க செயலாளர் முருகன் பேசினார். எட்டயபுரம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தாலுகா செயலாளர் ரவீந்திரன், தாலுகா குழு உறுப்பினர் நடராஜன், ஆட்டோ ஓட்டுனர் சங்க பொருளார் கண்ணன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Next Story