கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி அண்ணா மேலாண்மை நிலையத்தில் பயிற்சி வகுப்புகள் மீண்டும் தொடக்கம்


கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி அண்ணா மேலாண்மை நிலையத்தில் பயிற்சி வகுப்புகள் மீண்டும் தொடக்கம்
x
தினத்தந்தி 13 July 2021 6:47 PM IST (Updated: 13 July 2021 6:47 PM IST)
t-max-icont-min-icon

கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி அண்ணா மேலாண்மை நிலையத்தில் பயிற்சி வகுப்புகள் மீண்டும் தொடக்கம்.

சென்னை,

தமிழக அரசின் தலைமை செயலாளர் இறையன்பு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சென்னை பசுமைவழிச் சாலையில் இயங்கி வரும் அண்ணா மேலாண்மை நிலையம் தமிழக அரசின் தலைமை பயிற்சி நிறுவனமாகும். இங்கு அனைத்து விதமான அரசு அலுவலர்களுக்கும் பல்வேறு விதமான பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன.

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை 3-ந் தேதி வழங்கிய அனுமதியின்படி 11 துறைகளைச் சார்ந்த 100 “ஆ” பிரிவு அலுவலர்களுக்கு அடிப்படை பயிற்சி அண்ணா மேலாண்மை நிலையத்தில் உள்ள அண்ணா கலையரங்கில் 12-ந் தேதி (நேற்று) முதல் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன.

பயிற்சி வகுப்புகளில் பங்கேற்கும் அலுவலர்கள் மற்றும் விரிவுரையாளர்களுக்கு அரசு வழிகாட்டுதல்களின்படி சமூக இடைவெளி பின்பற்றப்படுவதுடன், நாள்தோறும் உடல் வெப்பநிலை மற்றும் ஆக்சிஜன் அளவு ஆகியவை பரிசோதிக்கப்பட்டு, அதன் பின்னரே வகுப்பறைக்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.

விரைவில் “அ” பிரிவு அலுவலர்களுக்கும் பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட உள்ளது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story