நொய்யல் ஆற்றின் நீர் மாதிரியை சேகரித்து மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் செயல்பாடுகளை திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் ஆய்வு செய்தார்.

நொய்யல் ஆற்றின் நீர் மாதிரியை சேகரித்து மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் செயல்பாடுகளை திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் ஆய்வு செய்தார்.
x
தினத்தந்தி 13 July 2021 9:47 PM IST (Updated: 13 July 2021 9:47 PM IST)
t-max-icont-min-icon

நொய்யல் ஆற்றின் நீர் மாதிரியை சேகரித்து மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் செயல்பாடுகளை திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் ஆய்வு செய்தார்.

திருப்பூர்:
நொய்யல் ஆற்றின் நீர் மாதிரியை சேகரித்து மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் செயல்பாடுகளை திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் ஆய்வு செய்தார்.
நொய்யல் ஆற்றின் நீர் மாதிரி
திருப்பூர் வடக்கு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் செயல்பாடுகள் குறித்து கலெக்டர் வினீத் நேற்று ஆய்வு செய்தார். முன்னதாக கலெக்டர் முன்னிலையில் திருப்பூர் நல்லாறு ஆற்றில் அங்கேரிபாளையம் பொது கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தின் அருகே நீர் மாதிரி சேகரிக்கப்பட்டது. தொடர்ந்து காசிபாளையம் பொது கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அருகே நொய்யல் ஆற்றில் இருந்து நீர் மாதிரியை மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலர்கள் எடுத்தனர்.
சேகரிக்கப்பட்ட நீர் மாதிரிகள் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய ஆய்வகத்திற்கு பரிசோதனைக்காக கொண்டு வரப்பட்டது. இதைத்தொடர்ந்து வடக்கு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தில் செயல்பட்டுவரும் ஆய்வகத்தில் பரிசோதனைக்கு பயன்படுத்தும் கருவிகளை கலெக்டர் பார்வையிட்டார்.
பழுதடைந்த கருவிகள்
பின்னர் பழுதடைந்த கருவிகளை உடனடியாக சரிசெய்ய அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். மேலும் ஆய்வகத்தின் தரத்தை மேம்படுத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள ஆய்வகத்தின் துணை தலைமை விஞ்ஞான அலுவலர், மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் ஆகியோருக்கு அறிவுரை வழங்கினார்.
இந்த ஆய்வின்போது திருப்பூர் வடக்கு மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் சரவணகுமார், மற்றும் உதவி செயற்பொறியாளர், தலைமை விஞ்ஞான அலுவலர் உள்ளிட்டவர்கள் உடனிருந்தனர்.

Next Story