ஓசூரில் பட்டப்பகலில் துணிகரம்: ரோட்டில் நடந்து சென்ற பெண்ணிடம் 6 பவுன் சங்கிலி பறிப்பு
ஓசூரில் பட்டப்பகலில் ரோட்டில் நடந்து சென்ற பெண்ணிடம் 6 பவுன் சங்கிலி பறிக்கப்பட்டது.
ஓசூர்,
ஓசூர் நேரு நகர் கம்பன் தெருவை சேர்ந்தவர் லோகேஷ். இவருடைய மனைவி நீலா (வயது 40). இவர் தனது தம்பியின் 3 வயது குழந்தையுடன், நேற்று முன்தினம் அதே பகுதியில் நடந்து சென்றார். அப்போது, மோட்டார் சைக்கிளில் 25 வயது மதிக்கத்தக்க 2 வாலிபர்கள் வந்தனர். அவர்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் நீலா கழுத்தில் அணிந்திருந்த 6 பவுன் தங்க சங்கிலியை பறித்து விட்டு, அங்கிருந்து மின்னல் வேகத்தில் தப்பி சென்றனர். இது குறித்து நீலா ஓசூர் டவுன் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகையை பறித்து சென்ற 2 பேரையும் வலைவீசி தேடி வருகிறார். ஓசூரில் பட்டப்பகலில் நடந்த இந்த நகை பறிப்பு சம்பவத்தால் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
Related Tags :
Next Story