ஓசூரில் தனியார் கம்பெனியில் 45 சிலிண்டர்கள் திருட்டு; மேற்பார்வையாளர் கைது


ஓசூரில் தனியார் கம்பெனியில் 45 சிலிண்டர்கள் திருட்டு; மேற்பார்வையாளர் கைது
x
தினத்தந்தி 13 July 2021 10:03 PM IST (Updated: 13 July 2021 10:03 PM IST)
t-max-icont-min-icon

ஓசூரில் தனியார் கம்பெனியில் 45 காலி சிலிண்டர்களை திருடிய மேற்பார்வையாளரை போலீசார் கைது செய்தனர்.

ஓசூர்:
கியாஸ் கம்பெனி
ஓசூர் சிப்காட் பகுதியில் தனியார் கியாஸ் கம்பெனி இயங்கி வருகிறது. இங்கிருந்து தொழிற்சாலைகளுக்கு தேவைப்படும் அனைத்து வகையான கியாஸ் சிலிண்டர்களும் அனுப்பப்பட்டு வருகிறது. இந்த கம்பெனியின் மேலாளராக வினோத் (வயது 45) என்பவர் வேலை பார்த்து வருகிறார்.
இந்தநிலையில் கடந்த சில நாட்களாக கம்பெனியில் உள்ள காலி சிலிண்டர்களின் எண்ணிக்கை குறைந்து வந்துள்ளது. இதுகுறித்து மேலாளர் வினோத் ஓசூர் சிப்காட் போலீசில் புகார் அளித்தார்.
45 சிலிண்டர்கள் திருட்டு
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், அந்த கம்பெனியின் மேற்பார்வையாளரான தொகரப்பள்ளியை சேர்ந்த பெரியண்ணன் (38) என்பவரின் ஆலோசனைப்படி, கம்பெனியில் டிரைவராக பணிபுரியும் தேனி மாவட்டம் அல்லிநகரம் பகுதியை சேர்ந்த அகமது (28) என்பவர் தொழிற்சாலைகளில் கியாஸ் சிலிண்டர்களை டெலிவரி செய்து விட்டு, காலி சிலிண்டர்களை திருடியது தெரியவந்தது.
பின்னர் அந்த காலி சிலிண்டர்களை பெரியண்ணன் சொல்லும் இடத்தில் விற்பனை செய்து வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதேபோல் அவர்கள் 45 சிலிண்டர்களை திருடி விற்றது தெரிந்தது. அவற்றின் மதிப்பு ரூ.2 லட்சத்து 92 ஆயிரத்து 500 என்று போலீசார் தெரிவித்தனர்.
இதையடுத்து போலீசார் மேற்பார்வையாளர் பெரியண்ணனை கைது செய்தனர். மேலும் டிரைவர் அகமதுவை தேடி வருகின்றனர்.

Next Story