திண்டுக்கல் மாவட்டத்தில் மேலும் 5 பேர் கொரோனாவுக்கு பலி
திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனாவுக்கு மேலும் 5 பேர் பலியாகினர்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி வாலிபர்கள் உள்பட 607 பேர் ஏற்கனவே இறந்துள்ளனர். மேலும் கடந்த சில நாட்களாக உயிரிழப்பு இல்லை.
இந்த நிலையில் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்ற திண்டுக்கல்லை சேர்ந்த 70 வயது மூதாட்டி, 67 வயது முதியவர், 45 வயது ஆண், ஒட்டன்சத்திரத்தை சேர்ந்த 70 வயது முதியவர் ஆகியோர் நேற்று சிகிச்சை பலனின்றி இறந்தனர்.
இதேபோல் பழனியை சேர்ந்த 60 வயது முதியவர் மதுரை அரசு மருத்துவமனையில் இறந்தார்.
இதனால் கொரோனாவுக்கு இறந்தவர்களின் எண்ணிக்கை 612 ஆக உயர்ந்தது. இதற்கிடையே நேற்று மேலும் 21 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதனால் மாவட்டத்தின் மொத்த பாதிப்பு 31 ஆயிரத்து 872 ஆனது. அதேநேரம் 28 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினர். நேற்றைய நிலவரப்படி 239 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
Related Tags :
Next Story