திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு கந்து வட்டி கொடுமையை தடுக்கக்கோரி ஆர்ப்பாட்டம்
திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு கந்துவட்டி கொடுமையை தடுக்கக்கோரி தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திண்டுக்கல்:
தீண்டாமை ஒழிப்பு முன்னணி, தமிழர் சமூகநீதி கழகம் உள்ளிட்ட அமைப்புகள் சார்பில் கந்து வட்டி கொடுமையை தடுக்க வலியுறுத்தி திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட செயலாளர் முத்துசாமி தலைமை தாங்கினார். இதில் மாநில பொதுச்செயலாளர் சாமுவேல்ராஜ், முன்னாள் எம்.எல்.ஏ. பாலபாரதி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் சச்சிதானந்தம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
அப்போது திண்டுக்கல் மாவட்டத்தில் உண்டார்பட்டி, அய்யம்பாளையம், பெரும்புள்ளி ஆகிய கிராமங்களில் நிலவும் கந்துவட்டி கொடுமைக்கு முடிவு கட்ட வேண்டும். இதுதொடர்பாக 15 பேர் கொடுத்த புகார் மனுக்களை விசாரித்து சம்பந்தப்பட்ட நபர்களை கைது செய்ய வேண்டும். மேலும் கந்து வட்டிக்காக பாதிக்கப்பட்ட மக்களிடம் எழுதி வாங்கப்பட்ட பத்திரங்களை திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்று வலியுறுத்தி கோஷமிட்டனர்.
Related Tags :
Next Story