கொள்ளையர்களை பிடிக்க முயன்ற வாலிபருக்கு கத்தி வெட்டு


கொள்ளையர்களை பிடிக்க முயன்ற வாலிபருக்கு கத்தி வெட்டு
x
தினத்தந்தி 13 July 2021 10:48 PM IST (Updated: 13 July 2021 10:48 PM IST)
t-max-icont-min-icon

திண்டிவனம் அருகே கொள்ளையர்களை பிடிக்க முயன்ற வாலிபரை கத்தியால் வெட்டிவிட்டு தப்பிச்சென்றவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

திண்டிவனம், 

திண்டிவனம் அருகே உள்ள நல்லாத்தூர் ரெட்டியார் தெருவை சேர்ந்தவர் பாலசுப்ரமணியன்(வயது 65). இவரது மகன் ராஜசேகர்(35). இவர்கள் அனைவரும் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தனர். 
அப்போது நள்ளிரவு 1 மணி அளவில் வீட்டில் உள்ள பொருட்களை யாரோ உருட்டுவதுபோல் சத்தம் கேட்டு ராஜசேகர் திடுக்கிட்டு எழுந்து பார்த்தார். அப்போது 4 பேர் ஒரு அறையில் இருந்த பொருட்களை கொள்ளையடித்துக் கொண்டிருந்தனர். 

கத்திவெட்டு 

உடனே ராஜசேகர், திருடன்... திருடன்... என்று கூச்சலிட்டபடி 4 கொள்ளையர்களை பிடிக்க முயன்றார். இதனால் ஆத்திரமடைந்த கொள்ளையர்கள், ராஜசேகரை சரமாரியாக தாக்கினர். பின்னர் தாங்கள் வைத்திருந்த கத்தியால் ராஜசேகரை வெட்டிவிட்டு, கொள்ளையர்கள் தப்பிச்சென்று விட்டனர். 
இதில் தலையில் வெட்டுக்காயமடைந்த அவரை, உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. 
இது குறித்த புகாரின் பேரில் ஒலக்கூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து 4 கொள்ளையர்களை வலைவீசி தேடி வருகின்றனர். 

Next Story