கிராம நிர்வாக அலுவலர், உதவியாளரை லாரி ஏற்றி கொல்ல முயற்சி


கிராம நிர்வாக அலுவலர், உதவியாளரை லாரி ஏற்றி கொல்ல முயற்சி
x
தினத்தந்தி 13 July 2021 5:25 PM GMT (Updated: 13 July 2021 5:25 PM GMT)

காரையூர் அருகே மணல் கடத்தலை தடுத்த கிராமநிர்வாக அலுவலர், உதவியாளரை லாரி ஏற்றி கொல்ல முயற்சி நடந்துள்ளது.

காரையூர், ஜூலை 14-
காரையூர் அருகே மணல் கடத்தலை தடுத்த கிராமநிர்வாக அலுவலர், உதவியாளரை லாரி ஏற்றி கொல்ல முயற்சி நடந்துள்ளது.
கிராமநிர்வாக அலுவலர்
காரையூர் அருகே கீழத்தானியம் பகுதியில் கிராம நிர்வாக அலுவலர் முருகராஜ், கிராம உதவியாளர் சுரேஷ் ஆகியோர் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர்.
அப்போது, மணல் கடத்தி வந்த ஒரு  லாரியை மறித்தனர். ஆனால், லாரியை நிறுத்தாமல் அவர்கள் மீது ஏற்றி கொல்ல முயன்றனர். கிராம நிர்வாக அலுவலரும், கிராம உதவியாளரும் நகர்ந்து சென்றதால் தப்பினர்.
கொலை முயற்சி
இதனையடுத்து லாரியில் இருந்து இறங்கிய விளாம்பட்டியைச் சேர்ந்த வெள்ளைச்சாமி மகன்கள் மூர்த்தி, கார்த்தி, பாலாஜி ஆகியோர் கிராம உதவியாளர் சுரேஷ், கிராம நிர்வாக அலுவலர் முருகராஜ் ஆகியோரை தாக்கினர். மேலும் கழுத்தை நெரித்து கொலை செய்ய முயன்றனராம்.
அதன்பின் அவர்களிடம் இருந்து தப்பித்த இருவரும் காரையூர் போலீசில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் முருகையன் வழக்குப்பதிவு செய்து வெள்ளைச்சாமி மகன் பாலாஜி (வயது 23) என்பவரை கைது செய்தார். மற்றவர்களை தேடி வருகிறார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story