2 பேர் குண்டர் சட்டத்தில் கைது
எரிசாராயம் பதுக்கி வைத்திருந்த 2 பேர் குண்டர் சட்டத்தில் பகது செய்யப்பட்டனர்.
திருவண்ணாமலை
வெம்பாக்கம் தாலுகா சுருட்டல் கிராமம் ரோட்டு தெருவை சேர்ந்தவர் மோகன்ராஜ் (வயது 33), செய்யாறு தாலுகா கூழமந்தல் கிராமம் சிவபிரகாஷ் நகரை சேர்ந்தவர் பாலமுருகன் (31). இவர்கள் எரி சாராயம் பதுக்கி வைத்திருந்ததாக போலீசாரிடம் சிக்கினர்.
இவர்களது குற்றச் செயல்களை கட்டுப்படுத்த இருவரையும் போலீஸ் சூப்பிரண்டு பவன்குமார்ரெட்டி பரிந்துரையின்பேரில் இருவரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் முருகேஷ் உத்தரவிட்டார்.
அதன்படி மோகன்ராஜ் மற்றும் பாலமுருகன் ஆகியோர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
Related Tags :
Next Story