நாய்கள் கடித்து மான் சாவு


நாய்கள் கடித்து மான் சாவு
x
தினத்தந்தி 13 July 2021 11:22 PM IST (Updated: 13 July 2021 11:22 PM IST)
t-max-icont-min-icon

திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் நாய்கள் கடித்து மான் உயிரிழந்தது.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள வனப் பகுதியில் மான், மயில், குரங்கு, காட்டுப்பன்றி உள்ளிட்ட பல்வேறு வன விலங்குகள் உள்ளன. 

இந்த நிலையில் நேற்று ஒரு வயதுடைய மான் குட்டி வனப்பகுதியில் இருந்து வழித்தவறி கிரிவலப்பாதையில் உள்ள வரட்டுகுளம் அருகில் வந்துள்ளது. 

அப்போது அங்கு சுற்றித்திரிந்த நாய்கள், மானை கடித்துள்ளது. இதில் காயம் அடைந்த மான் பரிதாபமாக உயிரிழந்தது. 

இதுகுறித்து தகவல் அறிந்ததும் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து உயிரிழந்த மானை மீட்டு பிரேத பரிசோதனை செய்து வனப்பகுதியில் புதைத்தனர்.

Next Story