கொல்லிமலையில் நாட்டு துப்பாக்கி வைத்திருந்தவர் கைது


கொல்லிமலையில் நாட்டு துப்பாக்கி வைத்திருந்தவர் கைது
x
தினத்தந்தி 13 July 2021 11:39 PM IST (Updated: 13 July 2021 11:39 PM IST)
t-max-icont-min-icon

கொல்லிமலையில் நாட்டு துப்பாக்கி வைத்திருந்தவர் கைது செய்யப்பட்டார்.

சேந்தமங்கலம்:
கொல்லிமலை வளப்பூர் நாடு ஊராட்சி பகுதியில் வாழவந்தி நாடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கங்காதரன் தலைமையிலான போலீசார் ரோந்து சுற்றி வந்தனர். அப்போது அங்குள்ள ஓட காட்டுப்பட்டி கிராமத்தை சேர்ந்த விவசாயி விஜயகுமார் (வயது 35) என்பவரது வீட்டின் பின்புறம் வைக்கோல் போரில் ஒரு நாட்டு துப்பாக்கி மறைத்து வைத்திருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். அதைத்தொடர்ந்து அந்த துப்பாக்கியை பறிமுதல் செய்த போலீசார் அவரை கைது செய்தனர்.

Next Story