வாலாஜா அருகே; வேன் கவிழ்ந்து 16 பேர் காயம்


வாலாஜா அருகே; வேன் கவிழ்ந்து 16 பேர் காயம்
x
தினத்தந்தி 13 July 2021 11:49 PM IST (Updated: 13 July 2021 11:49 PM IST)
t-max-icont-min-icon

வாலாஜா அருகே வேன் கவிழ்ந்து 16 பேர் காயம் அடைந்தனர்.

வாலாஜா

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா அடுத்த அனந்தலை ஊராட்சியிலிருந்து ராணிப்பேட்டைக்கு செல்லும் வழியில் தனியார் தோல் தொழிற்சாலை ஒன்று இயங்கி வருகிறது. 

இங்கு வேலை செய்பவர்களை தொழிற்சாலை வேனில் அழைத்து செல்வது வழக்கம். 

அதன்படி நேற்று காலை தொழிலாளர்களை அழைத்து சென்றபோது அனந்தலை பகுதியில் சாலை ஓர வளைவில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன்  அங்கிருந்த மின்கம்பத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. 

இதில் வேனில் இருந்த 16 பேருக்கு காயம் ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story