குடும்பத்தகராறில் தீக்குளித்த பெண் சாவு; குழந்தையும் பலியானது


குடும்பத்தகராறில் தீக்குளித்த பெண் சாவு; குழந்தையும் பலியானது
x
தினத்தந்தி 14 July 2021 12:03 AM IST (Updated: 14 July 2021 12:03 AM IST)
t-max-icont-min-icon

வேப்பந்தட்டை அருகே குடும்பத்தகராறில் குழந்தையுடன் தீக்குளித்த பெண் இறந்தார். அவரது குழந்தையும் பரிதாபமாக இறந்தது.

வேப்பந்தட்டை:

குழந்தையுடன் தீக்குளித்தார்
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள நெய்குப்பை கிராமத்தை சேர்ந்தவர் சத்தியராஜ். விவசாயி. இவரது மனைவி சுகந்தி (வயது 21). இவர்களுக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி, ஒரு வயதில் சுபஸ்ரீ என்ற பெண் குழந்தை இருந்தது. இந்நிலையில் சுகந்திக்கும், சத்தியராஜிக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் ஏற்பட்ட தகராறில் மனமுடைந்த சுகந்தி, வீட்டில் யாரும் இல்லாதபோது குழந்தையுடன் உடலில் மண்எண்ணெயை ஊற்றி தீ வைத்துக்கொண்டார்.
தாய்-குழந்தை சாவு
அவர்களின் அலறல் சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தினர் ஓடிவந்து சுகந்தி மற்றும் குழந்தையின் மீது பற்றி எரிந்த தீயை அணைத்தனர். பின்னர் அவர்களை 108 ஆம்புலன்ஸ் மூலம் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கிருந்து குழந்தை சுபஸ்ரீயை மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
இந்நிலையில் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த சுகந்தியும், குழந்தை சுபஸ்ரீயும் நேற்று முன்தினம் இரவு பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வி.களத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விசாரணை
மேலும் சுகந்திக்கும், சத்யராஜிக்கும் திருமணமாகி 2 ஆண்டுகளே ஆவதால் சுகந்தியின் தற்கொலைக்கு வரதட்சணை கொடுமை காரணமா? என்பது குறித்து பெரம்பலூர் வருவாய் கோட்டாட்சியர் நிறைமதி மேல் விசாரணை நடத்தி வருகிறார். குடும்ப தகராறில் தீக்குளித்த தாய், குழந்தையுடன் உயிரிழந்த சம்பவம் நெய்குப்பை கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Tags :
Next Story