கோவிலின் பூட்டை உடைத்து உண்டியல் பணம் திருட்டு


கோவிலின் பூட்டை உடைத்து உண்டியல் பணம் திருட்டு
x
தினத்தந்தி 14 July 2021 12:04 AM IST (Updated: 14 July 2021 12:04 AM IST)
t-max-icont-min-icon

கோவிலின் பூட்டை உடைத்து உண்டியல் பணத்தை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர்.

மங்களமேடு:
பெரம்பலூர் மாவட்டம் மங்களமேட்டை அடுத்த மங்களம் கிராமத்தில் பெரிய ஏரிக்கரையில் பெரியசாமி கோவில் உள்ளது. இந்த கோவிலின் பூசாரி லட்சுமணன் நேற்று முன்தினம் மாலை பூஜை முடிந்த பின்னர், கோவிலை பூட்டிவிட்டு சென்றார். மீண்டும் நேற்று காலை அவர் கோவிலை திறக்க வந்தார். அப்போது கோவில் கதவுகளின் பூட்டுகள் உடைக்கப்பட்டு கிடந்தன. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தார். இதில், முதல் நாள் இரவில் மர்ம நபர்கள் கோவிலின் இரும்பு கதவு மற்றும் மரக்கதவில் இருந்த 2 பூட்டுகளையும், அங்கிருந்த சூலத்தால் உடைத்து உள்ளே சென்று, அங்கிருந்த உண்டியலில் இருந்து பணத்தை திருடிச்சென்றது தெரியவந்தது. உண்டியலில் சுமார் ரூ.20 ஆயிரம் இருந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இது குறித்து பூசாரி லட்சுமணன், மங்களமேடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story