காட்பாடி ெரயில் நிலையத்தில் மீட்கப்பட்ட மராட்டிய மாநில சிறுவன் பெற்றோரிடம் ஒப்படைப்பு


காட்பாடி ெரயில் நிலையத்தில் மீட்கப்பட்ட மராட்டிய மாநில சிறுவன் பெற்றோரிடம் ஒப்படைப்பு
x
தினத்தந்தி 14 July 2021 12:04 AM IST (Updated: 14 July 2021 12:04 AM IST)
t-max-icont-min-icon

மீட்கப்பட்ட மராட்டிய மாநில சிறுவன் பெற்றோரிடம் ஒப்படைப்பு

வேலூர்

காட்பாடி ரெயில் நிலையம் முதலாவது நடைமேடையில் 15 வயது சிறுவன் கடந்த 11-ந் தேதி சுற்றித்திரிந்து கொண்டிருந்தான். அதனால் சந்தேகம் அடைந்த ரெயில்வே பாதுகாப்புப்படை போலீசார் சிறுவனை பிடித்து விசாரித்தனர். அப்போது சிறுவன் மராட்டிய மாநிலம் நாக்பூரை சேர்ந்தவன் என்பதும், ரெயிலில் தவறுதலாக காட்பாடிக்கு வந்து விட்டதாகவும் கூறினான். 

அதையடுத்து போலீசார், அந்த சிறுவனிடம் வீட்டு முகவரி, பெற்றோரின் செல்போன் எண் உள்ளிட்டவற்றை பெற்று கொண்டு, உடனடியாக பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் சிறுவனை காட்பாடியில் உள்ள தனியார் காப்பகத்தில் தங்க வைத்தனர். இந்த நிலையில் சிறுவனின் பெற்றோர் நேற்று காட்பாடிக்கு வந்தனர். அவர்களின் ஆவணங்களை ரெயில்வே பாதுகாப்புப்படை போலீஸ் இன்ஸ்பெக்டர் தீப்ரத் சத்பதி சரிபார்த்து பெற்றோரிடம் சிறுவனை ஒப்படைத்தார். மேலும் அவர், குழந்தைகளை எப்போதும் பெற்றோர்கள் தொடர்ந்து கண்காணித்து கொண்டே இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

Next Story