சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம். மாநகராட்சி அதிகாரிகள் எச்சரிக்கை
சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்
வேலூர்
வேலூர் மாநகராட்சி பகுதியில் சாலைகளில் சுற்றித்திரியும் மாடு, ஆடு, நாய் உள்ளிட்ட கால்நடைகளால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. சில சமயங்களில் வாகனங்கள் விபத்துக்கு உள்ளாகின்றன. எனவே அவற்றை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் மாநகராட்சி நிர்வாகத்துக்கு கோரிக்கை வைத்தனர். அதையடுத்து சாலைகளில் சுற்றித்திரியும் மாடு, ஆடுகளை பிடித்து அவற்றின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கும்படி கமிஷனர் சங்கரன் உத்தரவிட்டார்.
அதன்பேரில் 2-வது மண்டல சுகாதார அலுவலர் சிவக்குமார் தலைமையில் மாநகராட்சி ஊழியர்கள் நேற்று வேலூர்-ஆற்காடு சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றித்திரிந்த 3 மாடுகளை பிடித்தனர். பின்னர் அவை 2-வது மண்டல அலுவலக வளாகத்தில் கட்டி வைக்கப்பட்டன. மாடுகளை விடுவிக்க ரூ.5 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும் என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story