போக்குவரத்து விதிமீறல்; 590 பேர் மீது வழக்கு
போக்குவரத்து விதிமீறல்; 590 பேர் மீது வழக்கு
ராமநாதபுரம்
ராமநாதபுரம் காவல் உட்கோட்ட பகுதியில் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜா தலைமையில் அந்தந்த பகுதி போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையில் போக்குவரத்து மற்றும் சாலை விதிகளை மீறியவர்கள் மீது வழக்குபதிவு செய்து அபராதம் வசூலிக்கப்பட்டது. இவ்வாறு செல்போன் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டிச்சென்ற 40 பேர் மீதும், தலைக்கவசம் அணியாமல் சென்ற 363 பேர் மீதும், தலைக்கவசம் அணியாமல் பின்னால் அமர்ந்து சென்ற 87 பேர் மீதும், சரக்கு வாகனத்தில் பயணிகளை ஏற்றி சென்றதாக 9 பேர் மீதும், சீட் பெல்ட் அணியாமல் சென்றதாக 8 பேர் மீதும், இதர பிரிவுகளின் கீழ் 83 பேர் மீதும் என மொத்தம் 590 பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்களிடம் இருந்து அபராதமாக ரூ.83 ஆயிரத்து 200 வசூலிக்கப்பட்டுள்ளது. இதுதவிர, கொரோனா பரவிவரும் நிலையில் அரசின் உத்தரவினை மதிக்காமல் முக கவசம் அணியாமல் சாலைகளில் சென்றதாக 38 பேரிடம் அபராதம் வசூலிக்கப்பட்டது. தேவையின்றி சாலைகளில் சுற்றி திரிந்த ஒரு இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
Related Tags :
Next Story