கூட்டுறவு நூற்பாலையில் எம்.எல்.ஏ. ஆய்வு
கூட்டுறவு நூற்பாலையில் எம்.எல்.ஏ. ஆய்வு
பரமக்குடி
பரமக்குடி அருகே உள்ள அச்சங்குளம் கூட்டுறவு நூற்பாலையில் பரமக்குடி எம்.எல்.ஏ. முருகேசன் திடீரென ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவருக்கு நூற்பாலையின் மேலாண்மை இயக்குனர் ஜமால் முகமது பொன்னாடை அணிவித்து வரவேற்றார். பின்பு முருகேசன் எம்.எல்.ஏ., நூல் தயாரிக்கும் எந்திரங்களை பார்வையிட்டு விவரங்களை கேட்டறிந்தார். பின்பு அங்கு பணியாற்றும் தொழிலாளிகளிடம் குறைகளையும், கோரிக்கைகளையும் கேட்டு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் கலந்து ஆலோசித்து துறை அமைச்சர் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார். மேலும் தரமான முறையில் நூல் தயாரித்து விற்பனை செய்ய வேண்டும். தொழிலாளர்களின் நலனை பேணிக் காக்க வேண்டும். தொழிலாளர்களின் பிரச்சினைகளையும், கோரிக்கைகளையும் உடனுக்குடன் தீர்க்க வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
Related Tags :
Next Story