லாட்டரி சீட்டுகளுடன் ஒருவர் கைது


லாட்டரி சீட்டுகளுடன் ஒருவர் கைது
x

லாட்டரி சீட்டுகளுடன் ஒருவர் கைது

ராமநாதபுரம்
ராமநாதபுரம் கேணிக்கரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜோதிமுருகன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சின்னக்கடை பகுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நின்று கொண்டிருந்தவரை பிடித்து சோதனையிட்டபோது அவரிடம்  அசாம் மாநில லாட்டரி சீட்டுகள் இருந்தது தெரிந்தது. இதனை கைப்பற்றிய போலீசார் லாட்டரி விற்று வைத்திருந்த ரூ.5 ஆயிரத்து 210-ஐ  பறிமுதல் செய்தனர். பிடிபட்டவரிடம் நடத்திய விசாரணையில் அவர் வெளிப்பட்டினம் பாரதியார் தெரு ராஜேஷ்கண்ணன் (வயது46) என்பது தெரிந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.

Next Story