மைசூருவில் ஏலச்சீட்டு நடத்தி பொதுமக்களிடம் ரூ.40 லட்சம் மோசடி; பெண் கைது
மைசூருவில் ஏலச்சீட்டு நடத்தி பொதுமக்களிடம் ரூ.40 லட்சம் மோசடி செய்த பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
மைசூரு: மைசூருவில் ஏலச்சீட்டு நடத்தி பொதுமக்களிடம் ரூ.40 லட்சம் மோசடி செய்த பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
ரூ.40 லட்சம் மோசடி
ஹாசனை சேர்ந்தவர் ஹேமலதா (வயது 42). இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மைசூரு உதயகிரி போலீஸ் எல்லைக்குட்பட்ட சாத்தஹள்ளி பகுதியில் வந்து குடியேறினார். அவர், அந்தப்பகுதியை சேர்ந்த மக்களிடம் நன்கு அறிமுகம் ஆனார். இந்த நிலையில், தான் ஏலச்சீட்டு நடத்துவதாகவும், தன்னிடம் பணத்தை சேமித்து வைத்து வட்டியுடன் வாங்கி கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளார். இதனை நம்பிய அந்தப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள், ஹேமலதாவிடம் பணம் கட்டி வந்தனர்.
இவ்வாறு அவர் அந்தப்பகுதியை சேர்ந்த பொதுமக்களிடம் ரூ.40 லட்சம் வரை வசூலித்து இருந்தார். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஹேமலதா திடீரென்று மாயமானார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்தப்பகுதி மக்கள், அவரை தொடர்பு கொண்டனர். ஆனால் ஹேமலதாவின் செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இதனால் ஏலச்சீட்டு நடத்துவதாக கூறி ஏமாற்றி ஹேமலதா, ரூ.40 லட்சத்தை மோசடி செய்தது தெரியவந்தது.
பெண் கைது
இதுகுறித்து அந்தப்பகுதி மக்கள் உதயகிரி போலீசில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஹேமலதாவை தேடி வந்தனர். இந்த நிலையில், ஹேமலதா ஹாசனில் உள்ள உறவினர் வீட்டில் பதுங்கி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார், ஹாசனுக்கு சென்று அங்கு பதுங்கி இருந்த ஹேமலதாவை கைது செய்தனர். மேலும் அவரிடம் நடத்திய விசாரணையில், பொதுமக்களின் நம்பிக்கையை பெற்று ஏலச்சீட்டு நடத்துவதாக கூறி ஏமாற்றி ரூ.40 லட்சம் வரை வாங்கியதும், அந்த பணத்தை ஹேமலதா ஆடம்பரமாக செலவழித்து வாழ்ந்து வந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் அவரை மைசூருவுக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story