பெங்களூரு-திருப்பதி ஆன்மிக சுற்றுலா பஸ் மீண்டும் தொடக்கம்
பெங்களூரு - திருப்பதி இடையே மீண்டும் ஆன்மிக சுற்றுலா பஸ் இயங்க உள்ளது.
பெங்களூரு: கர்நாடக அரசு போக்குவரத்து கழகம்(கே.எஸ்.ஆர்.டி.சி.) வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
கொரோனாவால் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த பெங்களூரு-திருப்பதி ஆன்மிக சுற்றுலா பஸ் சேவைகள் வருகிற 16-ந் தேதி முதல் மீண்டும் தொடங்க உள்ளது. பெங்களூருவில் இருந்து வருகிற 16-ந் தேதி முதல் திருப்பதிக்கு சொகுசு வசதிகளுடன் கூடிய 2 ஆன்மிக பஸ்கள் செல்கிறது. இந்த பஸ்கள் சாந்திநகர், சாட்டிலைட் பஸ் நிலையங்களில் இருந்து புறப்பட்டு செல்கின்றன.
சாந்திநகரில் இருந்து இரவு 8.45 மணிக்கு புறப்படும் பஸ் ஜெயநகர் 4-வது பிளாக், நாகசந்திரா, என்.ஆர்.காலனி, கெம்பேகவுடா பஸ் நிலையம், டொம்லூர் டி.டி.எம்.சி., மாரத்தஹள்ளி, ஐ.டி.ஐ. கேட், கே.ஆர்.புரம், ஒசக்கோட்டை வழியாக செல்கிறது.
சாட்டிலைட் பஸ் நிலையத்தில் இருந்து இரவு 8.30 மணிக்கு புறப்படும் பஸ் விஜயநகர் டி.டி.எம்.சி.இ., நவரங், மல்லேசுவரம் சர்க்கிள், கெம்பேகவுடா பஸ் நிலையம், ஐ.டி.ஐ. கேட், கே.ஆர்.புரம், ஒசக்கோட்டை வழியாக திருப்பதி செல்கிறது. இந்த பஸ்களில் ஞாயிற்றுக்கிழமை முதல் வியாழக்கிழமை வரை பெரியவர்களுக்கு ரூ.2,200-ம், 6 முதல் 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு ரூ.1,800-ம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. வெள்ளி மற்றும் சனிக்கிழமை பயணம் செய்யும் பெரியவர்களுக்கு ரூ.2,600-ம், குழந்தைகளுக்கு ரூ.2,000-ம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story