இந்து கடவுள்களை அவமதித்த வாலிபருக்கு தர்ம-அடி


இந்து கடவுள்களை அவமதித்த வாலிபருக்கு தர்ம-அடி
x
தினத்தந்தி 14 July 2021 2:17 AM IST (Updated: 14 July 2021 2:17 AM IST)
t-max-icont-min-icon

இந்து கடவுள்களை அவமதித்தவர் கைது செய்யப்பட்டார்.

பெங்களூரு: கதக் (மாவட்டம்) டவுன் பகுதியில் வசித்து வருபவர் ஆசிப் ஜாகீர்தார். இவர், தனது உடலுக்குள் கடவுள் அருள் வந்திருப்பதாக கூறி, பொதுமக்களுக்கு குறி சொல்லி வந்தார். பல்வேறு மக்களுக்கு இருக்கும் பிரச்சினைகளுக்கு பரிகார பூஜை செய்து வந்ததாகவும் கூறப்படுகிறது. 

இந்த நிலையில், ஆசிப் ஜாகீர்தார் இந்து கடவுள்களை அவதூறாக பேசி அவமதித்ததாக கூறப்படுகிறது. இதுபற்றி அப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு தெரியவந்தது. இதையடுத்து, நேற்று முன்தினம் ஆசிப் ஜாகீர்தார் வீட்டுக்கு சென்ற பொதுமக்கள், அவரை பிடித்து தர்ம-அடி கொடுத்தார்கள். 

பின்னர் அவர், கதக் டவுன் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார். விசாரணையில், இந்து கடவுள்களை அவதூறாக பேசியதுடன், பரிகார பூஜை செய்வதாக கூறி பொதுமக்களிடம் இருந்து பணம் வசூலித்து அவர் மோசடியில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது. இதுதொடர்பாக கதக் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆசிப் ஜாகீர்தாரை கைது செய்தார்கள். அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Next Story