வீட்டில் நகை, பணம் திருட்டு


வீட்டில் நகை, பணம் திருட்டு
x
தினத்தந்தி 14 July 2021 2:30 AM IST (Updated: 14 July 2021 2:30 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை அருகே வீட்டில் நகை, பணத்தை மர்மநபர்கள் திருடி சென்று உள்ளனர்.

நெல்லை:
நெல்லை அருகே உள்ள மேலசெவல் ராஜீவ்காந்தி நகரை சேர்ந்தவர் சரவணகுமார் (வயது 43). இவர் தற்போது ரெட்டியார்பட்டியில் வீடு கட்டி அங்கு வசித்து வருகிறார். ராஜீவ்காந்தி நகரில் உள்ள வீட்டில் அவரது தாயார் கலாவதி மட்டும் தனியாக வசித்து வருகிறார்.

சம்பவத்தன்று கலாவதி வேலைக்கு சென்று விட்டு வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு கிடந்தது. உடனே கலாவதி வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது அங்கிருந்த 3 கிராம் தங்க கம்மல், ரூ.7 ஆயிரத்து 500 ஆகியவற்றை மர்மநபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் முன்னீர்பள்ளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Next Story