மேகதாது பிரச்சினையில் கர்நாடகம்-தமிழகத்தின் நலனை கருத்தில் கொண்டு உரிய முடிவு; கஜேந்திரசிங் ஷெகாவத் பேட்டி


மத்திய மந்திரி கஜேந்திரசிங் ஷெகாவத்.
x
மத்திய மந்திரி கஜேந்திரசிங் ஷெகாவத்.
தினத்தந்தி 14 July 2021 2:49 AM IST (Updated: 14 July 2021 2:49 AM IST)
t-max-icont-min-icon

மேகதாது பிரச்சினையில் கர்நாடகம்-தமிழகம் ஆகிய இரு மாநிலங்களின் நலனை கருத்தில் கொண்டு உரிய முடிவு எடுக்கப்படும் என்று மத்திய ஜல்சக்தித்துறை மந்திரி கஜேந்திரசிங் ஷெகாவத் தெரிவித்தார்.

பெங்களூரு: மேகதாது பிரச்சினையில் கர்நாடகம்-தமிழகம் ஆகிய இரு மாநிலங்களின் நலனை கருத்தில் கொண்டு உரிய முடிவு எடுக்கப்படும் என்று மத்திய ஜல்சக்தித்துறை மந்திரி கஜேந்திரசிங் ஷெகாவத் தெரிவித்தார்.

எங்களுக்கு முக்கியமல்ல

மத்திய ஜல்சக்தித்துறை மந்திரி கஜேந்திரசிங் ஷெகாவத் பெங்களூருவில் நேற்று முதல்-மந்திரி எடியூரப்பா உள்பட மந்திரிகள் மற்றும் அதிகாரிகளுடன் ஜல்ஜீவன் குடிநீர் திட்ட பணிகள் குறித்து ஆலோசனை கூட்டம் நடத்தினார். இந்த கூட்டத்திற்கு பிறகு கஜேந்திரசிங் ஷெகாவத் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

“மேகதாது திட்ட விஷயத்தில் தமிழ்நாடு அரசு என்ன முடிவு எடுத்தாலும் அது அந்த மாநிலத்திற்கு சம்பந்தப்பட்டது. இந்த விஷயத்தில் மத்திய அரசு என்ன முடிவு எடுக்க வேண்டுமோ அதை எடுக்கும். எந்த மாநிலத்தினர் என்ன முடிவு எடுக்கிறார்கள் என்பது எங்களுக்கு முக்கியமல்ல. நாங்கள் தகுந்த முடிவை எடுப்போம்.

பிற மாநிலங்களின்...

மேகதாது திட்டத்திற்கு எதிராக தமிழ்நாடு அரசு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடுத்துள்ளது. இந்த வழக்கில் என்ன தீர்ப்பு வருகிறது என்பதை நாங்கள் பொறுத்திருந்து பார்ப்போம். அதன் பிறகு இரு மாநிலங்களின் நலனை கவனத்தில் கொண்டு மத்திய அரசு உரிய முடிவை எடுக்கும். 

கட்சிகள் வேறு, அரசுகள் வேறு. ஜல்சக்தித்துறையின் சட்ட விதிகளுக்கு உட்பட்டு மேகதாது அணை விவகாரத்தில் நாங்கள் முடிவுகளை எடுப்போம். மேகதாது பிரச்சினையில் பிற மாநிலங்களின் கருத்துகளை கேட்டறிந்த பிறகே உரிய முடிவு எடுக்கப்படும்.”
இவ்வாறு மத்திய மந்திரி கஜேந்திரசிங் ஷொகாவத் கூறினார்.

Next Story