திருச்சியில் இருந்து ஐதராபாத்திற்கு மீண்டும் விமான சேவை தொடக்கம்
திருச்சியில் இருந்து ஐதராபாத்திற்கு மீண்டும் விமான சேவை தொடங்கி உள்ளது.
திருச்சியில் இருந்து
ஐதராபாத்திற்கு மீண்டும் விமான சேவை தொடக்கம்
செம்பட்டு,
திருச்சி விமான நிலையத்திலிருந்து உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமான சேவைகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கொரோனா காரணமாக திருச்சி- ஐதராபாத் இடையே இயக்கப்பட்ட விமான சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. அதேநேரம் சென்னை மற்றும் பெங்களூருக்கு மட்டும் விமான சேவை தொடர்ந்து இயங்கி வந்தது.
இந்த நிலையில் திருச்சி-ஐதராபாத் இடையே நிறுத்தப்பட்ட விமான சேவை நேற்று முன்தினம் முதல் மீண்டும் இண்டிகோ நிறுவனம் தொடங்கி உள்ளது. அதன்படி நேற்று முன்தினம் மாலை 6 மணிக்கு ஐதராபாத்தில் இருந்து 52 பயணிகளுடன் திருச்சி வந்தது. பின்னர் இங்கிருந்து மாலை 6.40 மணிக்கு 48 பயணிகளுடன் ஐதராபாத்துக்கு புறப்பட்டு சென்றது.
Related Tags :
Next Story