திருச்சி கே.கே.நகரில் கட்டிட ஒப்பந்ததாரர் வீட்டின் பூட்டை உடைத்து 10 பவுன் நகைகள் திருட்டு


திருச்சி கே.கே.நகரில் கட்டிட ஒப்பந்ததாரர் வீட்டின் பூட்டை உடைத்து 10 பவுன் நகைகள் திருட்டு
x
தினத்தந்தி 14 July 2021 3:55 AM IST (Updated: 14 July 2021 3:55 AM IST)
t-max-icont-min-icon

திருச்சி கே.கே.நகரில் கட்டிட ஒப்பந்ததாரர் வீட்டின் பூட்டை உடைத்து 10 பவுன் நகைகளை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர்.


கே.கே.நகர், 
திருச்சி கே.கே.நகரில் கட்டிட ஒப்பந்ததாரர் வீட்டின் பூட்டை உடைத்து 10 பவுன் நகைகளை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர்.

கட்டிட ஒப்பந்ததாரர்

திருச்சி, கே.கே.நகர், ராஜாராம் சாலை பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருபவர் அந்தோணிசாமி (வயது 47). இவர் கட்டிட ஒப்பந்ததாரராக பணிபுரிந்து வருகிறார். 

இவர் கடந்த 11-ந்தேதி ஓலையூரில் நடந்த தனது அக்காள் மகளின் நிச்சயதார்த்த விழாவிற்கு குடும்பத்துடன் சென்றார். பின்னர் இரவு வீட்டுக்கு வந்து பார்த்த போது, வீட்டின் பின்புற கதவு உடைக்கப்பட்டு வீடு திறந்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். 

10 பவுன் நகைகள் திருட்டு

வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைக்கப்பட்டிருந்த 10 பவுன் நகைகள் திருட்டு போனது தெரியவந்தது. உடனே இதுபற்றி கே.கே.நகர் போலீஸ் நிலையத்தில் அவா் புகார் அளித்தார்.

அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை செய்தனர். அப்போது, மோப்ப நாய் உதவியுடன் போலீசார் தடயங்களை கண்டுபிடித்து விடக்கூடாது என்பதற்காக திருடர்கள் வீட்டை சுற்றி மிளகாய் பொடியை தூவி சென்றது தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story