விளாத்திகுளம் அருகே விவசாயிகள் பங்களிப்புடன் செயல்படும் பயறு உற்பத்தியாளர் நிறுவனம் மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் ஆய்வு
விளாத்திகுளம் அருகே கமலாபுரத்தில் உள்ள விவசாயிகள் பங்களிப்புடன் செயல்படும் பயறு உற்பத்தியாளர் நிறுவனத்தை மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் நேற்று ஆய்வு செய்தார்.
விளாத்திகுளம்:
விளாத்திகுளம் அருகே கமலாபுரத்தில் உள்ள விவசாயிகள் பங்களிப்புடன் செயல்படும் பயறு உற்பத்தியாளர் நிறுவனத்தை மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் நேற்று ஆய்வு செய்தார்.
பயறு உற்பத்தியாளர் நிறுவனம்
விளாத்திகுளம் அருகே கமலாபுரத்தில் 1118 விவசாயிகளின் பங்களிப்புடன் தூத்துக்குடி பயறு உற்பத்தியாளர் நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
இந்நிறுவனத்தில் உளுந்து, பாசி பயறு, சிறுதானியங்கள் உட்பட பல்வேறு விதைகள் தரம் பிரிக்கப்பட்டு முதல் தர விதைகள் சான்றிதழுடன் விவசாயிகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், பயறு வகைகள் தோல் உரிக்கப்பட்டு மதிப்பு கூட்டு பொருளாகி விற்பனை செய்யும் பணிகள், செக்கு நல்லெண்ணெய், கடலை எண்ணெய், தேங்காய் எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய் உள்ளிட்ட எண்ணெய்கள் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனை செய்தல் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த நிறுவனத்தில் உள்ள விவசாயிகளுக்கு விதை, உரம், பூச்சி மருந்து உள்ளிட்ட தேவைகள் குறைந்த விலையில் தரமான அளவில் நிறுவனம் மூலம் நேரடியாக கொள்முதல் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. இந்நிறுவனத்தை கலெக்டர் செந்தில்ராஜ் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மேலும், அலுவலர்கள் மற்றும் விவசாய உறுப்பினர்கள் நிர்வாகிகளிடம் அவர் ஆலோசனை நடத்தினர்.
கலந்து கொண்டவர்கள்
ஆய்வின்போது மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான், துணை இயக்குநர் வேளாண் வணிகம் சாந்திராணி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) பழனிவேலாயுதம், நபார்டு மாவட்ட திட்ட மேலாளர் சுரேஷ்ராமலிங்கம், விளாத்திகுளம் தாசில்தார் ரகுபதி மற்றும் அலுவலர்கள், விவசாயிகள் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story