தர்மபுரி அருகே தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை
தர்மபுரி அருகே தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.
தர்மபுரி:
தர்மபுரி மாவட்டம் கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்தவர் புகழ்குமார் (வயது 43). தொழிலாளி. இவருக்கு திருமணமாகி மனைவி, குழந்தைகள் உள்ளனர். குடும்ப பிரச்சினை காரணமாக இவருடைய மனைவி பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டதாக கூறப்படுகிறது. இதனால் புகழ்குமார் மாமனார் வீட்டுக்கு சென்று மனைவியை சமாதானம் செய்து அழைத்து வந்துள்ளார். தொடர்ந்து புகழ்குமாருக்கும் அருகே வசிக்கும் சிலருக்கும் தகராறு ஏற்பட்டதால் அவருடைய மனைவி மீண்டும் கோபித்து கொண்டு பெற்றோர் வீட்டிற்கு சென்றதாகவும் கூறப்படுகிறது. இதனால் புகழ்குமார் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கிருஷ்ணாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
----
Related Tags :
Next Story