குடிநீருக்காக கிராம மக்கள் தவிப்பு


குடிநீருக்காக கிராம மக்கள் தவிப்பு
x
தினத்தந்தி 14 July 2021 9:58 PM IST (Updated: 14 July 2021 9:58 PM IST)
t-max-icont-min-icon

குடிநீருக்காக கிராம மக்கள் தவித்து வருகின்றனர்.

கீழக்கரை, 
கீழக்கரை அருகே உள்ள தில்லையேந்தல் ஊராட்சியில்  மாவிலா தோப்பு, மருதன் தோப்பு, மோர்குளம் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இங்கு ஆயிரக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் உள்ள அனைத்து தெருக்களிலும் தண்ணீர் தொட்டி அமைத்து குழாய்கள் மூலம் தண்ணீர் வருவதற்கு பல லட்சம்  ரூபாய் செலவில் தமிழக அரசு ஏற்பாடு செய்து ஒரு சில நாட்கள் மட்டும் தண்ணீர் வந்தது. தற்போது தெருக்களில் அமைத்த தண்ணீர் குழாய்களில் தண்ணீர் வருவது கிடையாது. இதனால் 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கீழக்கரை துணை மின் நிலையம் அருகில் உள்ள குழாய்களில் பெண்கள் இரவும் பகலுமாக தள்ளுவண்டி மூலம் குடிநீர் எடுத்து வரும் நிலை உள்ளது. கிராம மக்கள் நலனை கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து சீராக குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கிராம மக்கள் சார்பில் சமூக ஆர்வலர் பூபதி கோரிக்கை விடுத்துள்ளார்.

Next Story