வேடசந்தூர் அருகே ஏ.டி.எம். கார்டை அபேஸ் செய்து பணம் திருடிய வாலிபர் கைது
வேடசந்தூர் அருகே ஏ.டி.எம். கார்டை அபேஸ் செய்து பணம் திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
வேடசந்தூர்:
வேடசந்தூர் அருகே உள்ள கருக்காம்பட்டியை சேர்ந்தவர் ஓமன்ந்த் (வயது 57). கூலித்தொழிலாளி. இவர், கடந்த 10 நாட்களுக்கு முன்பு வேடசந்தூரில் உள்ள வங்கி ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுப்பதற்காக சென்றார். அப்போது அங்கிருந்த வாலிபர் ஒருவரிடம், தனக்கு ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுத்து தருமாறு ஓமன்ந்த் கூறினார். இதையடுத்து அந்த வாலிபரும், ஓமன்ந்தின் ஏ.டி.எம். கார்டை வைத்து ரூ.5 ஆயிரம் எடுத்து கொடுத்தார். அப்போது அந்த வாலிபர், ஓமன்ந்த் ஏ.டி.எம். கார்டின் ரகசிய எண்ணை தெரிந்து கொண்டதுடன், அவரது ஏ.டி.எம். கார்டை அபேஸ் செய்தார். பின்னர் அந்த ஏ.டி.எம். கார்டை பயன்படுத்தி ஓமன்ந்தின் வங்கிக்கணக்கில் இருந்து ரூ.65 ஆயிரத்தை அவர் திருடினார்.
இதுகுறித்து வேடசந்தூர் போலீஸ் நிலையத்தில் ஓமன்ந்த் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, நூதன முறையில் பணம் திருடிய வாலிபர் குறித்து விசாரணை நடத்தினர். அதில், வேடசந்தூர் அருகே உள்ள நாகம்பட்டியை சேர்ந்த ஆபேல் (27) என்பவர் ஓமன்ந்தின் ஏ.டி.எம். கார்டை பயன்படுத்தி பணத்தை திருடியது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து ரூ.1 லட்சம் மற்றும் 4 ஏ.டி.எம். கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
Related Tags :
Next Story