குழாய் உடைப்பால் வீணாகும் குடிநீர்
குழாய் உடைப்பால் குடிநீர் வீணாகி வருகிறது.
தொண்டி,
தொண்டி பேரூராட்சிக்கு திருவாடானை அருகே உள்ள பாரூர், கோவணி, ஆட்டூர், சேந்தனி ஆகிய இடங்களில் இருந்து ஆழ்குழாய் மூலம் செல்லும் குடிநீர் குழாய்கள் பல இடங்களில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் பல ஆயிரம் லிட்டர் தண்ணீர் தினமும் வீணாகி வருகிறது. தொண்டி பேரூராட்சி பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு போதிய அளவில் குடிநீர் வழங்க முடியாத நிலை உள்ளது. இது குறித்து தொண்டி பொதுமக்கள் கூறியதாவது:- 20 ஆண்டுகளுக்கு முன்பு தொண்டி பேரூராட்சிக்கு தனி குடிநீர் திட்டம் உருவாக்கப்பட்டது. இதற்காக அமைக்கப்பட்ட குடிநீர் குழாய்கள் தற்போது அதன் தன்மையை இழந்து விட்டதால் பழுதடைந்து சேதமடைந்து விட்டன.பல இடங்களில் ஏற்பட்டுள்ள உடைப்புகள் சரி செய்யப்படாமல் உள்ளது. எனவே தொண்டி கூட்டுக்குடிநீர் திட்ட குழாய்களை முற்றிலுமாக அகற்றிவிட்டு புதிய குழாய்கள் அமைத்து சீரான முறையில் குடிநீர் கிடைக்க பேரூராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
Related Tags :
Next Story