காணாமல் போன நாய்க்காக சுவரொட்டி ஒட்டிய விவசாயி
காணாமல் போன நாயை கண்டுபிடித்து தருவோருக்கு சன்மானம் அறிவித்து சுவரொட்டி ஒட்டிய விவசாயி
கல்லல்,ஜூலை
சிவகங்கை அருகே உள்ள மதகுப்பட்டியைச் சேர்ந்தவர் வயிரவன். இவர் தனது வீட்டில் ஜல்லிக்கட்டு காளை, ஆடு, மாடு, கோழி என அனைத்தையும் வளர்த்து வருகிறார். இவர் வளர்த்து வரும் வெள்ளையன் என்ற ஜல்லிக்கட்டு காளை பல்வேறு போட்டிகளில் கலந்துகொண்டு பரிசுகளை குவித்துள்ளது. இந்த நிலையில் அவர் ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் இருந்து நாய் குட்டி ஒன்றை வாங்கி வந்து செல்லமாக வளர்த்து வந்தார். இந்த நிலையில் கடந்த 3 தினங்களுக்கு முன்பு அந்த நாய் குட்டி திடீரென காணாமல் போனது. இதனால் அவர் மிகவும் கவலை அடைந்தார். எனவே நாயை எப்படியாவது தேடி கண்டுபிடித்து விட வேண்டும் என்று அவர் நினைத்தார். அதன்படி அவர் தனது நாய் குட்டியை கண்டுபிடித்து தருவோருக்கு ரூ.5 ஆயிரம் சன்மானம் வழங்குவதாக அறிவித்து அப்பகுதியில் சுவரொட்டி ஒட்டியுள்ளார். இது குறித்து விவசாயி வயிரவன் கூறுகையில், நான் ஏற்கனவே வளர்த்து வரும் ஜல்லிக்கட்டு காளையுடன் சேர்த்து பாசமுடன் விளையாடி வரும். மேலும் எனது குடும்ப உறுப்பினர்களுடனும் பாசமுடன் பழகி வந்தது. திடிரென கடந்த 3நாட்களுக்கு முன்பு வீட்டில் இருந்த எனது நாய்க்குட்டி காணாமல் போனதால் வீட்டில் உள்ள அனைவரும் சோகமடைந்த நிலையில் அந்த நாய்க்குட்டியை எப்படியாவது கண்டுபிடித்து விடலாம் என்று நினைத்திருந்தோம். ஆனால் இதுவரை கிடைக்கவில்லை. எனவே இந்த நாய்க்குட்டியை கண்டுபிடித்து தருபவர்களுக்கு சன்மானம் வழங்க வேண்டும் என்று நினைத்து இவ்வாறு போஸ்டர்களை அச்சடித்து ஓட்டியுள்ளோம். விரைவில் எங்களுடைய நாய்குட்டி கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story