முதலிபாளையம் சிட்கோ பகுதியில் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து வெளியே வரும் கரும்புகையால் பொதுமக்கள் அவதி
முதலிபாளையம் சிட்கோ பகுதியில் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து வெளியே வரும் கரும்புகையால் பொதுமக்கள் அவதி
திருப்பூர்
முதலிபாளையம் சிட்கோ பகுதியில் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து வெளியே வரும் கரும்புகையால் பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர்.
சுத்திகரிப்பு நிலையம்
திருப்பூர் முதலிபாளையம் பகுதியில் உள்ள சிட்கோவில் ஏராளமான நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இதுபோல் அந்த பகுதியில் தனியார் சுத்திகரிப்பு நிலையங்களும் ஏராளமாக செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் கடந்த சில நாட்களாக சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து கரும்புகை அதிகளவு வெளியே வந்து கொண்டிருக்கிறது. இந்த புகை அந்த பகுதிகளில் உள்ள வீடுகள் மற்றும் வாகனங்களில் துகள்களாக படிந்து வருகிறது.
இதன் காரணமாக பொதுமக்கள் பலரும் அவதியடைந்து வருகிறார்கள். கடந்த சில நாட்களாகவே வெளியேறும் புகையின் அளவும் அதிகரித்து வருகிறது. பாரத் அவென்யூ பகுதியில் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றன. இந்த துகள்கள் மற்றும் கரும்புகையால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். வீடுகளுக்குள் துகள்கள் படிவதால் நடந்து செல்கிறவர்களின் பாதங்கள் முழுவதும் கருப்பு நிறமாக இருக்கிறது.
துகள்களாக படிவதால் அவதி
இது குறித்து அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறியதாவது:-
எங்கள் பகுதியில் உள்ள ஒரு சுத்திகரிப்பு நிலையத்தில் நிலக்கரி மற்றும் விறகுகளை எரிப்பதால், அதில் இருந்து வெளியே வரும் புகையால் முதியவர்கள் பலரும் சுவாசிக்க முடியாமல் அவதியடைகிறார்கள். இந்த புகையும் தற்போது துகள்களாக படிவதால் தினமும் வீட்டை சுத்தம் செய்து வருகிறோம். இது குறித்து சுத்திகரிப்பு நிலையங்களுக்கு தெரிவித்தும், புகை குறைந்தபாடில்லை. வீடுகளில் உள்ள அனைத்து பொருட்களிலும் கரும்புகை துகள்களாக படிந்து பொருட்கள் வீணாகி வருகிறது.
எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு விதிமுறைகள்படி புகை வெளியேற்றப்படுகிறதா? என்பது குறித்து ஆய்வு செய்ய வேண்டும். பொதுமக்களின் சிரமத்தை போக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Related Tags :
Next Story