மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர் பலி
வேட்டி சக்கரத்தில் சிக்கியதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர் பலியானார்.
கறம்பக்குடி, ஜூலை.15-
வேட்டி சக்கரத்தில் சிக்கியதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர் பலியானார்.
வேட்டி சக்கரத்தில் சிக்கியது
தஞ்சாவூர் மாவட்டம் பத்துபுலி விடுதி கிராமத்தை சேர்ந்தவர் சத்தியமூர்த்தி (வயது 40). திருவோணம் ஒன்றிய விடுதலை சிறுத்தைகள் கட்சி செயலாளரான இவரும், அவரது உறவினர் சுதாகர் (40) என்பவரும் நேற்று கறம்பக்குடியில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள மோட்டார் சைக்கிளில் வந்தனர்.
பின்னர் மீண்டும் ஊருக்கு புறப்பட்டனர். மோட்டார் சைக்கிளை சுதாகர் ஓட்டி சென்றார். சத்தியமூர்த்தி பின்னால் அமர்ந்திருந்தார். அவர்கள் கறம்பக்குடி ஒன்றியம் சுக்கிரன் விடுதி செட்டி ஊரணி குளம் அருகே சென்றபோது, பின்னால் அமர்ந்திருந்த சத்தியமூர்த்தியின் வேட்டி மோட்டார் சைக்கிளின் சக்கரத்தில் சிக்கியது. இதனால் சத்திய மூர்த்தி மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதைக்கண்ட அப்பகுதியில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக கறம்பக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பலி
பின்னர் மேல்சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சென்ற சிறிது நேரத்தில் சத்தியமூர்த்தி பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து சத்தியமூர்த்தியின் சகோதரர் மகேந்திரன் கறம்பக்குடி போலீசில் புகார் கொடுத்தார்.அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
Next Story