பல்வேறு வளர்ச்சி பணிகள்
சீர்காழி ஒன்றியத்தில் நடந்து வரும் பல்வேறு வளர்ச்சி பணிகளை கலெக்டர் லலிதா ஆய்வு செய்தார்.
திருவெண்காடு:
சீர்காழி ஒன்றியத்தில் நடந்து வரும் பல்வேறு வளர்ச்சி பணிகளை கலெக்டர் லலிதா ஆய்வு செய்தார்.
வளர்ச்சி பணிகள்
சீர்காழி ஒன்றியத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகளை மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் லலிதா நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதன்படி மேலையூர் பகுதியில் ரூ.25 லட்சம் செலவில் கட்டப்பட்டுவரும் வடிகால், அதனை தொடர்ந்து வானகிரி மீனவர் கிராமத்தில் அமைக்கப்பட்டு வரும் மீன் உலர்தளம், காவிரி பூம்பட்டினத்தில் ரூ.19 லட்சம் செலவில் கட்டப்பட்டு வரும் புதிய ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் விரைந்து பணிகளை முடிக்க உத்தரவிட்டார்.
ரூ.30 லட்சத்தில் பாலம்
நெய்தவாசல் கிராமத்தில் ரூ.30 லட்சத்தில் அமைக்கப்பட்டுள்ள பாலத்தை பார்வையிட்டார். மேலும் நாயக்கர் குப்பம் மீனவ கிராமத்தில் தமிழக முதல்வரின் உங்கள் தொகுதி திட்டத்தின்கீழ் அமைக்கப்பட்டுவரும் கடற்கரை சாலை பணிகள், பெருந்தோட்டம் ஊராட்சியில் பிரதமரின் வீடுகட்டும் திட்டத்தின்கீழ் கட்டப்பட்டு வரும் வீடுகள் ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்து விரைந்து முடிக்க பயனாளிகளை கேட்டு கொண்டார்.
ஆய்வின் போது ஒன்றியக்குழு தலைவர் கமலஜோதி தேவேந்திரன், ஒன்றிய ஆணையர் அருள்மொழி. வட்டார வளர்ச்சி அலுவலர் (ஊராட்சிகள்) கஜேந்திரன், ஒன்றிய பொறியாளர்கள் கலையரசன், சிவக்குமார், தாரா ஊராட்சி மன்ற தலைவர்கள் சசிக்குமார், மோகனா ஜெய்சங்கர் ஆகியோர் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story