போளூர் அருகே; பள்ளி மாணவியை கடத்திய வாலிபர் போக்சோவில் கைது
போளூர் அருகே பள்ளிள மாணவியை கடத்திய வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
போளூர்
திருவண்ணாமலை மாவட்டம், போளூரை அடுத்த ஓகூர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜா. இவருடைய மகன் சசிகுமார் (வயது 28). திருப்பூரில் பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார்.
இவர் ஓகூர் கிராமத்தை சேர்ந்த 10-ம் வகுப்பு படிக்கும் 14 வயது மாணவியை கடந்த 7-ந்தேதி காரில் கடத்தி சென்று விட்டார். இதுகுறித்து மாணவியின் தாயார் போளூர் போலீசில் புகார் செய்தார்.
அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோவிந்தசாமி வழக்குப்பதிவு செய்து, மாணவியை தேடி வந்தார். இந்த நிலையில் அந்த மாணவி மட்டும் தனியாக ஓகூர் கிராமத்திற்கு நேற்று முன்தினம் வந்தார். தகவல் அறிந்து போலீசார் அங்கு சென்று மாணவியிடம் விசாரணை நடத்தினர்.
சசிகுமார் தன்னை திருமணம் செய்து கொள்வதாக காரில் அழைத்து சென்று தாலி கட்டினார் என்று கூறினார்.
அதைத்தொடர்ந்து சசிகுமாரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
Related Tags :
Next Story