பைப்லைன் அமைத்து சாராயம் காய்ச்சிய கும்பல்
வாணியம்பாடி அருகே பைப் லைன் அமைத்து சாராயம் காய்ச்சிய 5 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
வாணியம்பாடி
பைப் லைன் அமைத்து
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி, நாட்டறம்பள்ளி, ஆலங்காயம், திம்மாம்பேட்டை, காவலூர், மாதகடப்பா மலைப் பகுதியில் தொடர்ந்து சாராயம் காய்ச்சி விற்பனை செய்து வருவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிபிசக்கரவர்த்திக்கு தகவல் கிடைத்தது. அதைத்தொடர்ந்து போலீஸ் சூப்பிரண்டு தனிப்படை போலீசார், நாட்டறம்பள்ளி அடுத்த கொரிப்பள்ளம் பகுதியில் நேற்று அதிர சோதனை நடத்தினர்.
அப்போது விவசாயிகள் சொட்டு நீர் பாசனத்துக்கு பயன்படுத்தப்படும் பைப்புகள் மூலம் தண்ணீரை எடுத்து சென்று சாராயம் காய்ச்சுவது கண்டுபிடிக்கப்பட்டது. அங்கு போடப்பட்டிருந்த 5 ஆயிரம் லிட்டர் ஊறல்கள் அழிக்கப்பட்டது.
5 பேருக்கு வலைவீச்சு
மேலும் சொட்டு நீர் பாசனத்திற்கு பயன்படுத்தும் 1,000 மீட்டர் பிளாஸ்டிக் பைப்புகள், 50 மூட்டை மரப்பட்டைகள் ஆகியவை கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டது.
மேலும், இது தொடர்பாக கொரிப்பள்ளம் பகுதியை சேர்ந்த சின்னத்தம்பி (வயது 40), கப்பல் என்கிற முருகன் (55), கேசவன் (33), நடராஜன் (55) ஆகியோரை திம்மாம்பேட்டை போலீசார் தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story